×

அரசு மருத்துவமனையில் குடிநீர் பைப் திருடியவர் கைது

 

திருச்சி, செப்.30: திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் பைப்பை திருடிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அறுவை சிகிச்சை வார்டில் கை கழுவும் அறையில் இருந்த குழாயை நேற்றுமுன்தினம் ஒருவர் திருடிக் கொண்டு இருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை பிடித்து மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (42) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.

The post அரசு மருத்துவமனையில் குடிநீர் பைப் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Government Hospital ,Dinakaran ,
× RELATED மகன் இறந்த வேதனை தந்தை தற்கொலை