சென்னை மண்டலம் இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின்படி சட்டப்பிரிவு 78 மற்றும் 79ன் கீழ் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இணை ஆணையர் திருமதி ஜ.முல்லை அவர்கள் தலைமையில், உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) சி.நித்யா முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியோடு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1.5 கோடியாகும். இந்நிகழ்வின்போது திருக்கோயில் செயல் அலுவலர் சண்முகம், சிறப்பு பணி அலுவலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.
The post சென்னை ஓட்டேரி செல்லப்பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பீட்டிலான சொத்து ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு appeared first on Dinakaran.
