சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம்..!!

சென்னை: சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இதுவரை 48 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி 2,000-க்கு மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினரும், பணி நிரந்தரம் செய்ய கோரி பகுதிநேர மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தினரும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டி தேர்வு நடத்த கூடாது என வலியுறுத்தி, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினரும் தங்களின் குடும்பத்தினருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று இரவு கடும் மழையிலும் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் தற்போது வரை 48 ஆசிரியர்களுக்கு உண்ணாவிரதத்தால் உடல்நல குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: