கள்ளக்குறிச்சி அருகே ரசாயன ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் 1,500 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் மனு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ரசாயன ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் 1,500 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. ரசாயன ஆலை மீது நடவடிக்கை கோரி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராம பகுதியில் சி.பி. சால்வண்ட் எக்ஸ்ட்ராக்ஷன் என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. ஆந்திராவில் இருந்து கெமிக்கல் எக்ஸ்ட்ராக்ஷன் கொண்டு வரப்பட்டு அதிலிருந்து ரசாயனம் தயாரிக்கபட்டு வருகிறது. ஆழ்துளை கிணற்றில் இருந்து கிராமத்திற்கு செல்லும் குடிநீர், கழிவு நீருடன் கலந்து செல்வதாக குற்றசாட்டு வைத்துள்ளனர். ஆலை அருகே உள்ள கிணறுகளிலும் கழிவுநீர் கலப்பதால் எண்ணெய் பசையுடன் கிணறுகள் காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதோடு கால்நடைகளும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ரசாயன ஆலை கழிவுகளால் விவசாயத்தை நம்பியுள்ள 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். ரசாயன ஆலை மீது நடவடிக்கை கோரி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

The post கள்ளக்குறிச்சி அருகே ரசாயன ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் 1,500 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் மனு appeared first on Dinakaran.

Related Stories: