பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம்- விழிப்புணர்வு முகாமில் டிஐஜி முத்துசாமி பேச்சு

வேலூர் : பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு முகாமில் டிஐஜி முத்துசாமி பேசினார்.தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், வேலூர் முத்துமண்டபம் டோபிகானா அருகில் பெண்கள், குழந்தைகள் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நிர்வாக பொறியாளர் கீதா தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் நாகராஜன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டிஐஜி முத்துசாமி பேசும்போது, ‘தற்கால சூழலில் பெண்களின் பாதுகாப்பு என்பது முக்கியமானது.

அதேபோல் குழந்தைகளின் வளர்ச்சியுடன், பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் முக்கியமானதாக உள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை தடுக்க நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும்’ என்றார்.தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர் காஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சஞ்சித் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர் மோகன் நன்றி கூறினார்.

The post பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம்- விழிப்புணர்வு முகாமில் டிஐஜி முத்துசாமி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: