சர்வதேச சுற்றுலா தினம் பர்கூரில் கல்லூரி மாணவிகள் மலையேற்ற பயணம்

ஈரோடு : ஈரோடு பர்கூரில் நேற்று முன்தினம் மலையேற்ற பயணம் நடைபெற்றது.யூத் ஹாஸ்டல் அஸோசியேஷன் ஆப் இந்தியா கொங்கு கிளை மற்றும் ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன இணைந்து சர்வதேச சுற்றுலா தினத்தையொட்டி மலையேற்ற நிகழ்ச்சியை நடத்தினர். இதில், யூத் ஹாஸ்டல் மாநில துணை தலைவர் டாக்டர் ராஜா தலைமை வகித்தார். வேளாளர் மகளிர் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியை ரஞ்சனி, டாக்டர்.தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பர்கூர் வனச்சரகர் பிரகாஷ் மலையேற்ற பயணத்தை துவக்கி வைத்தார். தாமரைக்கரை முதல் ஈரட்டி நீர்வீழ்ச்சி வரை மலையேற்ற பயணம் நடைபெற்றது. மலையேற்ற பயணத்தின் முடிவில் சர்வதேச சுற்றுலா தின விழா கருத்தரங்கம் நடைபெற்றது. கொங்காடை வனவர் சீரங்கன் வரவேற்றார். சுற்றுலா தினம் குறித்து டாக்டர் மஞ்சுளா சிறப்புரையாற்றினார்.

வனவர் சுப்ரமணியம் நன்றி கூறினார். இம்மலையேற்ற பயண முகாமுக்கு அனுமதியளித்த ஈரோடு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபுவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இம்முகாமில் 95 மாணவிகள் கலந்து கொண்டனர். இதன் ஏற்பாடுகளை யூத் ஹாஸ்டல் கொங்கு கிளை தலைவர் சந்திரா தங்கவேல், பேராசிரியை ரஞ்சனி ஆகியோர் செய்திருந்தனர்.

The post சர்வதேச சுற்றுலா தினம் பர்கூரில் கல்லூரி மாணவிகள் மலையேற்ற பயணம் appeared first on Dinakaran.

Related Stories: