இயற்கை சீரழிவுகளில் ஒன்றான நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணித்து எச்சரிப்பதன் மூலம் உயிர்களையும், சொத்துக்களையும் காக்க முடியும். ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள ஆக்ஷிலரோ மீட்டர் மூலம் செயல்படுகிறது. புவியியல் மாற்றங்களை கணிக்கும் சைசோ மீட்டராக இந்த ஆக்ஷிலரோ மீட்டர் இயங்க முடியும் என கூகுள் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்திற்கான அறிகுறி தோன்றும் போது சார்ஸ் போடப்பட்டுள்ள செல்போன்களில் பதிவாகும் என்றும் ஒரே பகுதியில் பல செல்போன்களில் இந்த அதிர்ச்சி உணரப்பட்டால் அது சர்வருக்கு சென்றடைந்து நிலநடுக்கம் ஏற்படபோவதை கணித்து தகவல் வெளியிட செய்யும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு செல்ஃபோன்களில் எச்சரிக்கை தகவல் வெளியாகும் என்றும் ஆங்கிலம் மட்டுமின்றி மண்டல மொழிகளிலும் நிலநடுக்க எச்சரிக்கையை வெளியிட இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post உங்க ஏரியாவில் நிலநடுக்கம் வருமா?… ஆண்ட்ராய்டு செல்ஃபோன்களில் நிலநடுக்க எச்சரிக்கை வெளியிடும் கூகுள் appeared first on Dinakaran.
