×

பெருந்துறையில் சமுதாய வளைகாப்பு விழா

 

ஈரோடு, செப்.29: தமிழ்நாடு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் பெருந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட 100 கர்ப்பிணி பெண்களுக்கு பெருந்துறையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.பேபி தலைமை தாங்கினார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செ.சூர்யா முன்னிலை வகித்தார். இவ்விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருள்களை பெருந்துறை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே.பி.சாமி வழங்கி சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.சின்னச்சாமி, தெற்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் விவேக், பள்ளிபாளையம் பேரூராட்சி தலைவர் எஸ்.கோகிலா, பேரூராட்சி செயலாளர்கள் எஸ்.தங்கமுத்து, எஸ்.திருமூர்த்தி, ஓ.சி.வி.ராஜேந்திரன், தொகுதி மருத்துவரணி அமைப்பாளர் நவீன், துணை அமைப்பாளர் பாலாஜி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோபால், ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் துர்கா தேவி, அன்புசெல்வி, தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சுப்பிரமணி, நித்திக்குமார், கணேசன், லாரன்ஸ், அந்தோணி, வட்டார ஒருங்கிணைப்பாளர் சௌந்திரராஜன், வட்டார சமுதாய சுகாதார செவிலியர்கள் சுகுணா, மலர்விழி, சந்திரலேகா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post பெருந்துறையில் சமுதாய வளைகாப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Perundurai ,Erode ,Tamil Nadu Department of Social Welfare and Women's Rights ,
× RELATED பஸ் கவிழ்ந்து மாணவர்கள் 27 பேர் காயம்