×

முட்டை ஏற்றி வந்த மினி டெம்போ மோதி வாலிபர் பரிதாப பலி

விருத்தாசலம், செப். 29: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள பட்டி குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தஜோதி மகன் அருண்பாண்டியன்(28). இவர் நேற்று தனது பைக்கில், கம்மாபுரம் அடுத்த மும்முடிசோழகன் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, திரும்ப தனது ஊருக்கு கம்மாபுரம்-விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். கோபாலபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே முட்டை ஏற்றி வந்த மினி டெம்போ ஒன்று அருண்பாண்டியன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட அருண்பாண்டியன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதியினர் கம்மாபுரம் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற கம்மாபுரம் போலீசார், இறந்து போன அருண்பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முட்டை ஏற்றி வந்த மினி டெம்போ மோதி வாலிபர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Arunpandian ,Anandajyothi ,Patti Gudigadu ,Mangalampet ,Vriddhachalam ,
× RELATED விருத்தாசலத்தில் லாரியை திருடி சென்ற வாலிபர் கைது