×

சங்கராபுரம் அருகே சோகம் முஸ்கந்தா ஆற்றில் தவறி விழுந்த மகனை காப்பாற்றிய தாய் நீரில் மூழ்கி பரிதாப சாவு

சங்கராபுரம், செப். 29: சங்கராபுரம் அருகே ஆற்றில் தவறி விழுந்த மகனை காப்பாற்றிய தாய், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மனைவி வள்ளி (30). இவர் தனது இரண்டு மகன்களுடன் அதே கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் மனைவி ராதிகாவுடன் கொடியனூர் முஸ்கந்தா ஆற்றில் குளிக்க சென்றார். அங்கு வள்ளி துணி துவைத்துக்கொண்டிருந்தபோது மகன் திடீரென தண்ணீரில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே நீரில் குதித்த வள்ளி மகனை மீட்டு ராதிகாவிடம் ஒப்படைத்தார். ஆனால் வள்ளிக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். தகவலறிந்த வடபொன்பரப்பி போலீசார் போலீசார், கிராம மக்கள் உதவியுடன் நீரில் அடித்துச் செல்லப்பட்ட வள்ளியை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சங்கராபுரம் அருகே சோகம் முஸ்கந்தா ஆற்றில் தவறி விழுந்த மகனை காப்பாற்றிய தாய் நீரில் மூழ்கி பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : Muskanda river ,Shankarapuram ,Sankarapuram ,Dinakaran ,
× RELATED வாலிபரை தாக்கிய 3 பேர் கைது