கே.எஸ்.அழகிரி (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்): விவசாய விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையையும், துயரத்தையும் தருகிறது.
ராமதாஸ் (பாமக நிறுவனர்): இந்தியாவில் வேளாண் வளர்ச்சிக்கும், உணவுப் பாதுகாப்புக்கும் ஈடு இணையற்ற பங்களிப்பு செய்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சென்னையில் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): 1960ம் ஆண்டில், உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதன் மூலம் அதிக உற்பத்தியையும், 200 சதவிகித லாபத்தையும் சாதித்துக் காட்டினார் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): உலகப் புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு வேதனையுற்றோம்.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டவரும், வேளாண் விஞ்ஞானியும், முற்போக்கு சிந்தனை கொண்டவருமான எம்.எஸ். சுவாமிநாதன் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றோம்.
மேலும் பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், பா.ம.க கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ உட்பட தமிழகத்தின் பல்வேறு கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
The post வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.
