கலவரம் மீண்டும் வெடித்துள்ளதால் ஸ்ரீநகர் மூத்த ஐபிஎஸ் அதிகாரி மணிப்பூருக்கு இடமாற்றம்

புதுடெல்லி: ஸ்ரீநகரில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் பால்வாலை மணிப்பூருக்கு இடமாற்றம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரில் 2 மாணவர்கள் கொல்லப்பட்டதையடுத்து அங்கு மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. இதனால் அங்கு போலியான தகவல்கள் பரவுவதை தடுக்க இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நகர் காவல்துறை கண்காணிப்பாளராக இருக்கும் ராகேஷ் பால்வால் மணிப்பூருக்கு இடமாற்றம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு அமைச்சரவை நியமனக்குழு இன்று ஒப்புதல் அளித்தது. மூத்த ஐபிஎஸ் அதிகாரியான இவருக்கு சொந்த மாநிலம் மணிப்பூர் ஆகும். இவர் புல்வாமா தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய குழுவில் உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கலவரம் மீண்டும் வெடித்துள்ளதால் ஸ்ரீநகர் மூத்த ஐபிஎஸ் அதிகாரி மணிப்பூருக்கு இடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: