கடன் தொல்லையால் விபரீதம் முன்னாள் ராணுவ வீரர் மனைவி மகளுடன் விஷமருந்தி தற்கொலை

மதுரை: கடன் தொல்லையால் முன்னாள் ராணுவ வீரர், மனைவி, மகளுடன் விஷமருந்தி தற்கொலை செய்த சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை, சர்வேயர் காலனி அருகே ஆவின் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (41). முன்னாள் ராணுவ வீரர். மனைவி விசாலினி (36). மகள் ரமிஷா ஜாஸ்பல் (12). ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், ரமேஷ் சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

அவரது வீடு கடந்த 2 நாட்களாக திறக்கப்படவில்லை. வீட்டிலிருந்து நேற்று மாலை துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் திருப்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரமேஷ் மற்றும் அவரது மனைவி, மகள் மூவரும் விஷமருந்தி இறந்து கிடந்தனர். ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ் ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, அதிக கடன் சுமைக்கு ஆளானதும், இதன் காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து திருப்பாலை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடன் தொல்லையால் விபரீதம் முன்னாள் ராணுவ வீரர் மனைவி மகளுடன் விஷமருந்தி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: