இது குறித்து சென்னை ஐஐடியின் ஸான்ஸிபர் வளாக இயக்குநர் பிரீத்தி அகலாயம் அளித்த பேட்டி: ஸான்ஸிபர் வாளகம் ஒரு மாறுபட்ட வளாகமாக இருக்கும். ஆராய்ச்சிதான் எங்கள் முக்கிய நோக்கம். மேலும், தான்சானியா நாட்டை சேர்ந்த பெண்கள் இன்ஜினியரிங் படிக்க ஆர்வமாக உள்ளனர். அதேபோல் கென்யா மற்றும் எத்தியோப்பிய மாணவர்களும் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். சென்னை ஐஐடி வளாகம் பசுமை மற்றும் வனவிலங்குகளுக்கு பெயர்போனது, அதேபோல்தான் தான் ஸான்ஸிபர் வளாகமும் அமைக்கப்படும். இந்த கட்டிடங்கள் இந்தியா மற்றும் ஸான்ஸிபர் கட்டிடவியலை கொண்டதாக இருக்கும். இன்னும் ஆறு மாதங்களில் இதற்கான பணிகள் தொடங்கப்படும்.
The post சென்னை ஐஐடி தகவல் வெளிநாட்டு மாணவர்களுக்காக 215 ஏக்கரில் கல்வி வளாகம் appeared first on Dinakaran.