சென்னை: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து தனியார் பள்ளிகளும் அக்டோபர் 3ம் தேதி திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜமுருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள அறிக்கை: பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் தேதி அக்டோபர் 3ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் முதல் பருவம், காலாண்டுத் தேர்வு விடுப்பு முடிந்து அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட வேண்டும்.
The post இயக்குநர் உத்தரவு தனியார் பள்ளிகள் அக்டோபர் 3ல் திறக்க வேண்டும் appeared first on Dinakaran.