சென்னை அருகே கந்தன்சாவடியை தலைமையிடமாக கொண்டு ‘பிளக்ஸ்ட்ரானிக்ஸ் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் பிரபல செல்போன் நிறுவனங்களுக்கு தேவையான உதரிபாகங்களை தயாரித்து வழங்கி வருகிறது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், உண்மையான வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்புஅதன் மூலம் பல கோடி ரூபாய் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு வரிஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேநேரம் கடந்த 2022-23 நிதி ஆண்டில் இந்த நிறுவனம் 2021-22 நிதியாண்டை காட்டிலும் குறைந்த வருமானத்தை வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பிரபல செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான ‘பிளக்ஸ்ட்ரானிக்ஸ் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திற்கு சொந்தமான கந்தன்சாவடியில் உள்ள தலைமை அலுவலகம், ஸ்ரீபெரும்புதூர், ஆவடி சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகள், பெருங்குடி என சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மொத்தம் 10 இடங்கில் பெங்களூரில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.பெரும்புதூர், ஆவடி சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் யாரையும் வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியே விடவில்லை.
அதேபோல் இன்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள் யாரையும் உள்ளே விடவில்லை. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொழிற்சாலை முன்பு சிறிது நேரம் காத்திருந்து திரும்பி சென்றனர். இந்த சோதனையில், பிளக்ஸ்ட்ரானிக்ஸ் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இரண்டு விதமாக கணக்குகளை பராமரித்து வந்ததும், துணை நிறுவனங்கள் பெயரில் போலியாக வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யதாக கணக்கு காட்டிய ஆவணங்கள் என பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனத்தில் ஐடி ரெய்டு: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ததில் மோசடி; அதிகாரிகள் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது appeared first on Dinakaran.