இதன் காரணமாக பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஏனம்பாக்கம், கல்பட்டு ஆகிய ஊராட்சிகளுக்கு மீண்டும் பேருந்தை இயக்க வேண்டும் என்று கூறி திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளரும், சோழவரம் ஒன்றிய கவுன்சிலருமான பிரகாஷ் தலைமையில் பொதுமக்கள் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் நேற்று முன்தினம் கோரிக்கை மனு கொடுத்தனர். இம்மனு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார்.
The post ஏனம்பாக்கம், கல்பட்டு ஊராட்சிக்கு மீண்டும் பேருந்து இயக்க வேண்டும்: கலெக்டரிடம் கோரிக்கை மனு appeared first on Dinakaran.
