×

கடற்கரையில் தாறுமாறாக ஓடிய கார் காட்டுக்குள் கவிழ்ந்து விபத்து

காரைக்கால், செப். 27: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வருபவர் மாணவன் அபிஷேக். இவர் தனது நண்பரின் காரை எடுத்துக்கொண்டு காரைக்கால் கடற்கரைக்கு நேற்று வந்துள்ளார். பிறகு அவர் கடற்கரையை பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலை வளைவில் திரும்பி உள்ளார். அப்போது திடீரென அவரது காரின் முன்பக்க டயர் வெடித்து கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள அலையாத்தி காட்டுக்குள் புகுந்து கார் கவிழ்ந்தது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காரில் சிக்கிக்கொண்ட மாணவனை பத்திரமாக மீட்டனர். மாணவர் அபிஷேக் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். உடனே போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி கிரேன் உதவியுடன் காரை மீட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் மாணவர் குடிபோதையில் வாகனம் இயக்கினாரா ? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

The post கடற்கரையில் தாறுமாறாக ஓடிய கார் காட்டுக்குள் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Abhishek ,MBBS ,Dinakaran ,
× RELATED விருத்தாசலம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து