காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்: அமைச்சர், எம்பி பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில், மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்பியுமான டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார்.

இக்குழுவில், ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மக்கள் நல்வாழ்வு துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய் துறை, கல்வி துறை, நெடுஞ்சாலை துறை, மின்சார துறை, மீன்வள துறை உள்ளிட்ட துறைகளில் ஒன்றிய அரசின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும், விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறுகின்றதா என்பதை ஆய்வு செய்ததுடன், பல்வேறு துறைகள் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி பணிகளை உரிய காலத்தில் முடிக்க தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், எஸ்.ஆர்.ராஜா, மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், குன்றத்தூர் ஒன்றிய குழுத்தலைவர் சரஸ்வதி மனோகரன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்துத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்: அமைச்சர், எம்பி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: