தமிழ்நாடு முழுவதும் 12,525 ஊராட்சிகளில் அக்டோபர் 2ல் கிராம சபை கூட்டம்: பருவமழை முன்னெச்சரிக்ைக குறித்து விவாதிக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 12,525 ஊராட்சிகளிலும் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜனவரி 26 (குடியரசு தினம்), மார்ச் 22 (உலக தண்ணீர் தினம்), மே 1 (தொழிலாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 2 (காந்தி பிறந்த தினம்), நவம்பர் 1 (உள்ளாட்சிகள் தினம்) ஆகிய 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அடுத்த கிராம சபை கூட்டம் காந்தி பிறந்த தினமான வருகிற அக்டோபர் 2ம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக கலெக்டர்களுக்கு ஊராட்சி இயக்க இயக்குநர் பொன்னையா அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அக். 2ம் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில், அக்டோபரில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு எடுக்க வேண்டும். கிராம சபை கூட்டத்திற்கான செலவின வரம்பு ரூ.5000 உயர்த்தப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் 12,525 ஊராட்சிகளில் அக்டோபர் 2ல் கிராம சபை கூட்டம்: பருவமழை முன்னெச்சரிக்ைக குறித்து விவாதிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: