நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: இந்திய அரசு 9வது முறையாக வேலை வாய்ப்பு விழாவை நடத்துகிறது. வங்கித்துறைக்கு பணியாளர்களை தேர்வு செய்யும்போது 100 நபர்களை தேர்வு செய்கிறோம் என்றால், அதில் 40 நபர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்கும்போது, எஞ்சிய 60 பணியாளர்களை பிற மாநிலங்களை சேர்ந்தவர்களை கொண்டு நிரப்புகிறோம். ஒருவேளை தமிழகத்திலிருந்தே 100 தகுதியான நபர்களும் கிடைத்தால், 100 இடங்களுக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களை கொண்டு நிரப்பலாம். ஆனால் போதுமான பணியாளர்கள் உள்ளூரில் இருந்து கிடைக்காதபோது பிற மாநில மக்களை பணிக்கு அமர்த்துகிறோம். கிளர்க், பியூன், அட்டெண்டர் போன்ற பணியிடங்களில் உள்ளூர் மக்கள் போதுமான அளவு இல்லாதபோதுதான் வெளிமாநில மக்கள் மூலம் அந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த நிலை ஏற்படக்கூடாது என்றால், தமிழகத்திலிருந்து நிறைய மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post உள்ளூரில் 100% ஆட்கள் கிடைக்காதபோது தான் வெளிமாநில நபர்களுக்கு வேலை: நிர்மலா சீதாராமன் பேச்சு appeared first on Dinakaran.
