The post 30ம் தேதிக்குள் சொத்து வரிசெலுத்த தவறினால் அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை appeared first on Dinakaran.
சென்னை: சொத்து வரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் வரும் 1ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்களும், வணிகர்களும், சொத்துவரி மற்றும் தொழில் வரியினை வரும் 30ம் தேதிக்குள் செலுத்திட வேண்டும். சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிகர்களின் நலன் கருதி, 28ம் தேதி (மிலாடி நபி) மற்றும் 30ம் தேதி (சனிக்கிழமை) ஆகிய அரசு விடுமுறை நாட்களில் ரிப்பன் கட்டிடத்திலுள்ள வருவாய்த்துறை தலைமையிடம், மண்டலங்களில் உள்ள வருவாய்த்துறையில் சொத்துவரி மற்றும் தொழில்வரி வசூல் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. சொத்துவரி மற்றும் தொழில் வரியினை வரும் 30ம்தேதிக்குள் செலுத்த தவறினால், விதிகளின்படி, அக்டோபர் 1ம்தேதி முதல் அபராத வட்டித் தொகை விதிக்கப்படும். எனவே, சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் 30ம் தேதிக்குள் சொத்து மற்றும் தொழில் வரியினை இணையதளத்திலும், தலைமையகத்திலும் மற்றும் மண்டல அலுவலகங்களிலும் செலுத்தி பயன்பெறவதோடு, சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
The post 30ம் தேதிக்குள் சொத்து வரிசெலுத்த தவறினால் அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை appeared first on Dinakaran.