மீஞ்சூரை அடுத்த பழவேற்காட்டில் 1991-1992ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த பழவேற்காட்டில் ஜெகதாம்பாள் சுப்ரமணியம் அரசு மேல்நிலை பள்ளியில் 1991-1992ம் ஆண்டு படித்த பழைய மாணவர்கள் 30 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், மாணவர்கள், தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர், அன்றைய காலத்தில் கடலில் படகு மூலம் சவாரி செய்து பள்ளிக்கு வந்து படிக்கும் போது ஏற்பட்ட சூழல் மற்றும் சிரமங்கள் உள்ளிட்ட பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சீனிவாசன், சுப்பிரமணி, கோபாலகிருஷ்ணன், ராஜாராம், தங்கராஜ் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு சிறப்பு பரிசுகளும் நினைவு கேடயம் ஆகியவற்றை மாணவர்கள் வழங்கினர். மேலும் தாங்கள் படித்த இந்த பள்ளிக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று எண்ணி பள்ளி மாணவர்களுக்கு அமர்வதற்கு இருக்கைகளும் ஆசிரியர்களுக்கு நாற்காலிகளும் என ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கினர். வரும் காலங்களிலும் எங்களால் முடிந்த உதவியை செய்வோம் என்று கூறியது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. விழா ஏற்பாடுகளை யுனிவர்ஸ் மேன்பவர் சர்வீஸ் மேலாளர் எலிசபெத், விஸ்வநாதன் சந்தானம், ஈவா ஆகியோர் செய்திருந்தனர். அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது.

The post மீஞ்சூரை அடுத்த பழவேற்காட்டில் 1991-1992ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: