ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் கயல்விழி தலைமையில் நடைபெற்றது

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள புதிரை வண்ணார் மற்றும் பழங்குடியின மக்களின், பொருளாதார. கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான சமூக, முன்னேற்றத்தை அடைவதற்கென தனியாக புதிரை வண்ணார் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களின் தலைமையில். திருத்தியமைத்து முறையே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, 3.08.2023 மற்றும் அரசாணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 08.09.2023ல் ஆணைகள் வெளியிடப்பட்டது.

புதிரை வண்ணார் நல வாரியத்திற்கு அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட
செ.ஸ்டாலின்குமார், சட்டமன்ற உறுப்பினர், துறையூர் தொகுதி, க. சிவகாமசுந்தரி, சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணராயபுரம் தொகுதி, மு. பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர், சீர்காழி தொகுதி, மற்றும் 6 இதர அலுவல்சாரா உறுப்பினர்களும், தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரியத்திற்கு அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட கே. பொன்னுசாமி, சட்டமன்ற உறுப்பினர், சேந்தமங்கலம் தொகுதி மற்றும் 15 இதர அலுவல்சாரா உறுப்பினர்களும், 26.09.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இச்சந்திப்பின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந.கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் க. லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நல இயக்குநர் ச.அண்ணாதுரை, த.ஆனந்த், பழங்குடியினர் நல இயக்குநர் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் கயல்விழி தலைமையில் நடைபெற்றது appeared first on Dinakaran.

Related Stories: