வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 15 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 66,024 புள்ளிகளில் நிறைவு..!!

மும்பை: பெரும் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் வர்த்தக நேர முடிவில் மாற்றமின்றி முடித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தொடக்கத்தில் 245 புள்ளிகள் சரிந்து பின்னர் 216 புள்ளிகள் உயர்ந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 15 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 66,024 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி முற்பகலில் 73 புள்ளி சரிந்து, பிறகு 60 புள்ளி உயர்ந்து மீண்டும் குறைந்தது.

வர்த்தக நோ முடிவில் நிஃப்டி எந்த மாற்றமும் இன்றி 19,674 புள்ளிகளிலேயே நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 16 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின. பஜாஜ் ஃபைனான்ஸ் 4.6%, பஜாஜ் ஃபின்செர்வ் 2%, கோட்டக் வங்கி 1.6%, ஏசியன் பெயின்ட்ஸ் பங்கு 1.4% விலை உயர்ந்தன.

The post வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 15 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 66,024 புள்ளிகளில் நிறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: