உதகையில் 2வது சீசனுக்கான மலர் கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்: 10 ஆயிரம் பூந்தொட்டிகளைக் கொண்டு சந்திரயான் வடிவமைப்பு

உதகை: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 2வது சீசனை ஒட்டி மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்கள் இரண்டாவது சீசன் காலம் ஆகும். இந்த ஆண்டிற்கான இரண்டாவது சீசன் தற்போது தொடங்கி இருப்பதால் உதகை தாவரவியல் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக அலங்கார மேடைகளில் சால்வியா, மேரிகூல், பிகோட்டியா உள்ளிட்ட 30 வகையான பூக்கள் நிரம்பிய 15 ஆயிரம் மலர்த்தொட்டிகள் அடுக்கும் பணி நடைபெற்று வருகின்றன. சந்திரயான் 3 நிலவில் தரை இறங்கியதை கொண்டாடும் வகையில் 10 ஆயிரம் பூந்தொட்டிகளை கொண்டு அதன் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. பூங்காவின் மற்ற பகுதிகளில் உள்ள 4 லட்சம் மலர் செடிகளில் 60 வகையான மலர்கள் பூத்து குலுங்க தொடங்கி இருப்பதால் இதனைகான சுற்றுலா பயணிகளின் வரத்தும் அதிகரித்துள்ளது.

 

The post உதகையில் 2வது சீசனுக்கான மலர் கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்: 10 ஆயிரம் பூந்தொட்டிகளைக் கொண்டு சந்திரயான் வடிவமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: