விஜயலட்சுமி பூனை சண்டைக்கு கூப்பிட்டா புலி நான் போவேனா?.சீமான் பஞ்ச்

கோவை: விஜயலட்சுமி பூனை சண்டைக்கு கூப்பிட்டா புலி நான் போவேனா? என்று சீமான் பஞ்ச் பேசி உள்ளார். கோவை சிட்ரா பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விஜயலட்சுமி, வீரலட்சுமி குறித்து கேட்கிறீர்கள். எனக்கு அனைவரும் அறிவுறுத்தி இருப்பது வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் வாயை மூடிக்கொண்டு இருக்க சொல்லி இருக்கின்றனர். நீங்கள் கேட்பதால் கூறுகிறேன். நான் புலி, பூனை சண்டைக்கு கூப்பிட்டால் புலி சண்டைக்கு போகுமா? அல்லது பேசாமல் போகுமா?. என்னை எதிர்த்து பேசுவது அவர்களுக்கு ஒரு அடையாளம்.

என்னை எதிர்க்க வேண்டிய தேவை உங்களுக்கு இருக்கிறது. உங்களை எதிர்க்க, விமர்சிக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கிறதா? என்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் எதிரி கிடையாது. நான் யாரை எதிர்க்கின்றேனோ அவர்கள்தான் எதிரி. என் எதிரி யார்? என் இலக்கு, என் பயணம், எவ்வளவு தூரம் என்பது எனக்குத் தெரியும். என்னோடு ஒப்பிட்டுப்பேசுவது எனக்கும் சிறுமை, உங்களுக்கும் சிறுமை. நான் செய்யும் வேலைக்கும் சிறுமை. இதை விட்டுவிடுங்கள். இந்தியா கூட்டணியில் நாங்கள் இல்லை. தேச நலன் என வரும்போது சில விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post விஜயலட்சுமி பூனை சண்டைக்கு கூப்பிட்டா புலி நான் போவேனா?.சீமான் பஞ்ச் appeared first on Dinakaran.

Related Stories: