இதே போல் சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு நெல்லை செல்கிற வந்தே பாரத் விழுப்புரத்தில் மாலை 4.35 மணிக்கும், திருச்சியில் மாலை 6.40 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு இரவு 7.55 மணிக்கும், மதுரைக்கு இரவு 8.40 மணிக்கும், விருதுநகருக்கு இரவு 9.13 மணிக்கும், இறுதியாக நெல்லைக்கு இரவு 10.40 மணிக்கு சென்றடைகிறது. இந்த வந்தே பாரத் ரயிலானது வாரத்தில் செவ்வாய் கிழமை தவிர்த்து 6 நாட்கள் இயக்கப்படவுள்ளது.
சென்னை-விஜயவாடா வந்தே பாரத் ரயில், சென்னையிலிருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, 7.15 மணிக்கு ரேணிகுண்டாவுக்கு வந்தடைகிறது அங்கு 5 நிமிடம் நின்று, 8.26 மணிக்கு கூடுர் வந்தடைகிறது. அங்கிருந்து 8.39 மணிக்கு நெல்லூர் வந்தடைகிறது அங்கு 1 நிமிடம் நின்று ,10.9 மணிக்கு ஒங்கோலேவுக்கு வந்தடைகிறது அங்கும் 1 நிமிடம் நின்று, 11.21 மணிக்கு தெனாலி ரயில் நிலையத்தில் வந்தடைகிறது.
அங்கு 1 நிமிடம் நின்று இறுதியாக நண்பகல் 12.10 மணிக்கு விஜயவாடா வந்தடைகிறது. அதே போல் மறுமார்க்கத்தில் அன்று மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டு தெனாலிக்கு 3.49 மணிக்கும், ஒங்கோலேவுக்கு மாலை 5.3 மணிக்கும், நெல்லூருக்கு மாலை 6.19 மணிக்கும், கூடுருக்கு மாலை 7.5 மணிக்கும், ரேணிகுண்டாவுக்கு இரவு இரவு 8.15 மணிக்கும், இறுதியாக இரவு 10 மணிக்கு சென்னைக்கு வருகிறது.
The post சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் எங்கெங்கு நிற்கும், எவ்வளவு கட்டணம்? appeared first on Dinakaran.
