×

திருச்சியில் டீக்கடையில் 6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

 

திருச்சி, செப்.23: திருச்சியில் டீக்கடையில் தடை செய்யப்பட்ட 6 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி பாலக்கரை ஹெம்ஸ்டவுன் பகுதியில் உள்ள டீக்கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 6 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன் இதுகுறித்து பாலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து செந்தண்ணீர்புரம் ரவிச்சந்திரனை(59) கைது செய்தனர்.

The post திருச்சியில் டீக்கடையில் 6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Dinakaran ,
× RELATED திருவெறும்பூரில் ரூ.6.2 கோடியில் புதிய பேருந்து நிலையம்