ஆதிதிராவிடர், பழங்குடியினர் பெட்ரோல் பங்க் அமைக்க குறைந்த வட்டியில் கடன்: கலெக்டர் தகவல்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் பெட்ரோல் நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளத்தில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் வருகிற 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் முதல் முறையாக கொள்முதல் செய்யும் பெட்ரோல், டீசல் (ஒரு டேங்கர்) தொகை, குறைந்த வட்டியில் தாட்கோ மூலமாக கடனாக வழங்கப்படும். பாரத் பெட்ரோலியம் லிமிடெட் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாட்கோ தலைமை அலுவலக மாநில திட்ட மேலாளர் (திட்டங்கள்) கைபேசி எண்ணில் 7358489990 தொடர்பு கொள்ளலாம்.

The post ஆதிதிராவிடர், பழங்குடியினர் பெட்ரோல் பங்க் அமைக்க குறைந்த வட்டியில் கடன்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: