இந்நிலையில் வேங்கைவயல், இறையூரை சேர்ந்த மேலும் 6 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும்.இதற்கிடையில் ஏற்கனவே டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதில், அதன் முடிவுகள் படிப்படியாக வந்து கொண்டிருக்கிறது. அதனை வைத்தும் ஒரு புறம் விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.
The post வேங்கைவயல் விவகாரம்: மேலும் 6 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை.! சிபிசிஐடி முடிவு appeared first on Dinakaran.