இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக இவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். 26 வடமாநில தொழிளாலர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து குருபரப்பள்ளி போலீசார் சக்தி பாஸ்ட் புட் கடையின் உரிமையாளர் சென்னப்பன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்க பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் முதற்கட்டமாக சக்தி சிக்கன் ரைஸ் கடையின் உள்ள சிக்கன் மற்றும் உணவு பொருட்களை கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் எடுத்து சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கிருஷ்ணகிரி நகரில் இயங்கி வந்த சக்தி பாஸ்ட் புட் கடைக்கு கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் வசந்தி, மற்றும் அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்துள்ளார். மேலும் கடைக்கு முறையான அனுமதி மற்றும் ஆவணங்கள் சமர்பித்த பின் கடை மீண்டும் திறக்கப்படும் எனவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
The post கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு 26 பேருக்கு வாந்தி, மயக்கம்: அதிகாரிகள் கடைக்கு சீல்! appeared first on Dinakaran.