×

நாயக்கன்பாளையத்தில் 3 ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்வில் 100% வெற்றி

பெ.நா.பாளையம்,செப்.21: கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள நாயக்கன்பாளையத்தில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. பாலமலை அதுவார பகுதியில் உள்ள கிராம குழந்தைகள் மற்றும் மலை வாழ் மக்களின் குழந்தைகளும் இப்பள்ளியில் அதிகமாக படிக்கின்றனர். இங்கு பத்து, பிளஸ்-2 பயிலும் மாணவ மாணவியர் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற அரசு பொது தேர்வில் 10ம் வகுப்பு மாணவ மாணவியர் 98 சதவீதமும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் நூறு சதவீதமும் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

இதற்க்காக அப்பகுதி மக்கள் மற்றும் தி.மு.கவினர் இணைந்து ஆசிரியர் – ஆசிரியைகளுக்கு பாராட்டு விழா நடத்தினர். மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிளை செயலாளர் ஆனந்தராஜ் வரவேற்று பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி பிரியா முன்னிலை வகித்தார்.செல்வ நம்பி, ரவி, சந்துரு ஜெகவி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மயில்சாமி, சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம்பிடித்த மாணவிகள் பிரியதர்ஷினி,மிமன்சா,தனியா ஆகியோருக்கு கேடயம் வழங்கப்பட்டது.

பிளஸ்-2 வில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மாணவ மாணவியரின் நூறு சதவீதம் தேர்ச்சிக்கு காரணமாக இருந்த தலைமையாசிரியர் இராஜேந்திரன் மற்றும் ஆசிரிய- ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் தமிழ் ஆசிரியர் முத்துராஜா நன்றி கூறினார்.

The post நாயக்கன்பாளையத்தில் 3 ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்வில் 100% வெற்றி appeared first on Dinakaran.

Tags : Nayakkanpalayam ,B.N.Palayam ,Periyanayakanpalayam ,Coimbatore ,Balamalai Athwara ,
× RELATED விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் ; 2 பேர் கைது