சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1215 கனஅடி நீர் வரத்து 3 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நீர்மட்டம் 114.35 அடியாக உயர்வு

தண்டராம்பட்டு, செப்.21: சாத்தனூர் அணைக்கு விநாடிக்கு 1,215 கனஅடி நீர்வரத்து காரணமாக, அணையின் நீர்மட்டம் நேற்று 114.35 அடியாக உயர்ந்தது. இதையடுத்து திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. சமீபத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வலது, இடதுபுற கால்வாய்கள் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதற்கிடையில், சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் விடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று காலை அணைக்கு விநாடிக்கு 1,215 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 114.35 அடியாக உள்ளது. அணையில் 116 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும். 116 அடியை கடக்கும்போது அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரக்கூடிய தண்ணீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் என்று உதவி பொறியாளர் ராஜேஷ் தெரிவித்தார். இதற்கிடையில், அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகம் உள்ளது. 116 அடியை எட்டி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்தால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். எனவே கரையோர மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1215 கனஅடி நீர் வரத்து 3 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நீர்மட்டம் 114.35 அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: