‘கூட்டணியும் வேண்டாம்… புண்ணாக்கும் வேண்டாம்…’ அதிமுக எம்எல்ஏ காட்டம்

கோவை: கோவை மாநகர், கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு ஆகிய 3 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் கோவையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏவுமான பிஆர்ஜி அருண்குமார் பேச எழுந்தார்.

அப்போது அருகில் இருந்த ஒரு தொண்டர், அவருக்கு, சால்வை அணிவிக்க முயன்றார். ஆனால், அருண்குமார் அதை ஏற்கவில்லை. ஆனாலும் அந்த தொண்டர், ‘‘அண்ணே… கூட்டணி கட்சினே…’’ எனக்கூறியபடி மீண்டும் சால்வை அணிவிக்க முயன்றார். அதற்கு அருண்குமார் கோபமாக, ‘‘கூட்டணியும் வேண்டாம். ஒரு புண்ணாக்கும் வேண்டாம்’’ எனக்கூறிவிட்டு பேச சென்றார். அவருக்கு சால்வை அணிவிக்க முயன்றவர் பாஜவை சேர்ந்தவர் எனவும், அந்த கோபத்தில்தான் அருண்குமார் அவ்வாறு காட்டமாக பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ‘‘கூட்டணியும் வேண்டாம்…ஒரு புண்ணாக்கும் வேண்டாம்…’’ என அதிமுக எம்எல்ஏ பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

The post ‘கூட்டணியும் வேண்டாம்… புண்ணாக்கும் வேண்டாம்…’ அதிமுக எம்எல்ஏ காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: