பெரியார் சிலை மீது மாட்டு சாணம் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பெரியார் சிலை மீது மாட்டு சாணம் ஊற்றிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு: கோவை மாவட்டம் வடசித்தூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் மார்பளவு சிலை மீது சிலர் மாட்டுச் சாணத்தைப் பூசி அவமதிப்பு செய்துள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், மக்களுக்கு சுயமரியாதை உணர்வை ஏற்படுத்தவும் போராடிய தலைவரின் சிலையை இவ்வாறு அவமதிப்பது கண்டிக்கத்தக்கது. பொது அமைதியையும், சட்டம் – ஒழுங்கையும் சீர்குலைக்கும் நோக்கத்துடன் இது செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும். இதற்கு காரணமானவர்களையும், அவர்களின் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பெரியார் சிலை மீது மாட்டு சாணம் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: