×

துவரங்குறிச்சியில் விநாயகர் சிலை ஊர்வலம்

 

துவரங்குறிச்சி, செப். 20: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் கடந்த 18ம்தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு துவரங்குறிச்சியின் முக்கிய பகுதிகளில் 15 இடங்களில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை அனைத்து விநாயகர் சிலைகளும் வாகனங்கள் மூலம் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து ஒன்றிணைத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன. பின்னர் துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் குளக்கரையில் சிலைகளை ஒன்றன்பின் ஒன்றாக கரைத்தனர். இதை முன்னிட்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு பணியில் ஈடுபட்டனர்.

The post துவரங்குறிச்சியில் விநாயகர் சிலை ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Dwarankurichi ,Duvarankurichi ,Vinayagar Chaturthi ,Duvarangurichi, Trichy district ,Duvarangurichi ,
× RELATED துவரங்குறிச்சி அருகே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை போலீஸ் கைது!