
திருக்கோவிலூர், செப். 20: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திருப்பாலபந்தல் குடியிருப்பு பகுதியை சேர்ந்த குருமூர்த்தி-ஜெகதீஸ்வரி தம்பதியருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி திருமூர்த்தி என்ற 2 வயது ஆண் குழந்தையும், புவனேஸ்வரி என்ற 1 மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி மாலை 5.30 மணியளவில் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை திருமூர்த்தியை காணவில்லை. இதையடுத்து பெற்றோர், பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் குருமூர்த்தி திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சிவச்சந்திரன், தனசேகர் மற்றும் போலீசார் சிவஜோதி, வீரப்பன், பாஸ்கரன், மணிமாறன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைத்து காணாமல் போன திருமூர்த்தியை தேடி வருகின்றனர்.
The post திருக்கோவிலூர் அருகே 2 வயது ஆண் குழந்தை மாயம் appeared first on Dinakaran.