பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: தமிழகம் மட்டுமல்ல, ஒன்றியம் மட்டும் அல்ல, உலகமே உற்றுப் பார்க்கும் அளவிற்கு மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்வர் துவக்கி வைத்து ஒரு கோடியே 6 லட்சத்து ஐம்பதாயிரம் பயனாளிகளுக்கு உரிமைத்தொகை வழங்கி சரித்திரத்தில் இடம்பெற்றார். இது நமது முதல்வருக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கினாலும் முந்தைய நாளே பலருக்கும் இந்த திட்டத்தின் வாயிலாக பணம் சென்றடைந்து விட்டது. இதனால் இந்த திட்டத்தை பற்றி எந்தவித குறைகளும் கூற முடியாதவர்கள் ஏதாவது கிடைக்குமா என எதிர்பார்க்கிறார்கள். முதல்வரின் கனவு திட்டம் முதல்வரின் தொலைநோக்கு திட்டம் இது. முதல்வரின் திட்டமிடலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. மனசாட்சி உள்ள யாரும் இந்த திட்டத்தை குறை சொல்ல மாட்டார்கள். குறை சொல்பவர்களுக்கு எந்தவித மனசாட்சி உள்ளது என்பதை உங்களது பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
The post மகளிர் உரிமைத்திட்டத்தை மனசாட்சி உள்ளவர்கள் குறை கூற மாட்டார்கள்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.
