மதுராந்தகத்தில் ஆம்னி பேருந்து மோதி தம்பதி உயிரிழப்பு: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மறியல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க மேம்பாலம் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நேரிட்டு உயிழப்புகள் அதிகரித்து வருவதாக கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். மதுராந்தகம் அருகே உள்ள மோச்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்களின் அன்றாட பணிகளுக்காக நாள்தோறும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்துதான் செல்ல வேண்டும். ஆனால், கனரக வாகனங்கள் அதிகம் வந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையை கடக்க மேம்பாலம் இல்லாததால் தொடர் விபத்து நேரிட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மோச்சேரி பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், விஜயலட்சுமி தம்பதி ஆம்னி பேருந்து மோதி உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மோச்சேரி கிராம மக்கள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் சமரசம் செய்தனர். மேம்பாலம் இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக மோச்சேரி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே நியாயமான கோரிக்கைகளை அலட்சியப்பபடுத்தாமல் உடனடியாக மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post மதுராந்தகத்தில் ஆம்னி பேருந்து மோதி தம்பதி உயிரிழப்பு: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: