இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரதீப் ஹரேஷ்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மெல்கி ராஜா சிங், மாவட்ட தலைவர் இளங்கோவன், தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துறை புல உதவியாளர் சங்கம் மற்றும் தோழமை சங்க பொறுப்பாளர்கள், கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தாலிப் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நில அளவைத் துறையில் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட நிரந்தர பணியாளர்களான புல உதவியாளர் பணியிடங்களை தனியார் மூலம் அத்துக் கூலிக்கு நியமித்துக் கொள்ளலாம் என அரசு ஆணை பிறப்பித்ததன் மூலம் படித்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து துறைகளுக்கும் தாய் துறையாக விளங்கும் நில அளவை துறையின் அளவை பணியின் ஆதார ஊழியராக உள்ள புல உதவியாளர்களை தனியார் ஏஜென்சி மூலம் நியமிக்கும் நடவடிக்கை உடனே கைவிட வேண்டும். என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.