தாம்பரத்தில் ரூ.80.70 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: எம்பி, எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 5வது மண்டலம் 63வது வார்டு, நாகாத்தம்மன் கோயில் தெருவில் ரூ.10.70 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய குடிநீர் விநியோக கனரக வாகனம் துவக்க விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம் நேற்று மாலை கிழக்கு தாம்பரம், எம்.இ.எஸ் சாலையில் நடைபெற்றது. இதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டு, ரூ.10.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், ரூ.70 லட்சம் மதிப்பில் 2 புதிய குடிநீர் விநியோக கனரக வாகனம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். அதனைதொடர்ந்து 63வது வார்டு எம்.இ.எஸ் தெருவில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆகியோர், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர்கள் எஸ்.இந்திரன், டி.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ஜோதி குமார், ரமணி ஆதிமூலம், சிட்லபாக்கம் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தாம்பரத்தில் ரூ.80.70 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: எம்பி, எம்எல்ஏ தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: