இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். மோடி அரசே வெளியேறு; தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை ஏற்றாதே என கோஷங்கள் எழுப்பினர். வடக்கு கடற்கரை போலீசார் முத்தரசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க இந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் பாரிமுனை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராயபுரம் பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது: மக்கள் விரோத போக்குகளை கடைப்பிடித்து வரும் பாஜக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும். இந்தியா கூட்டணி பாஜக அரசை வெளியேற்றும். ஜி 20 மாநாட்டில் குடியரசுத் தலைவர் அளித்த விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காதது கண்டிக்கத்தக்கது. சனாதனம் குறித்து எல்லோரும் பேசி வருவதை தான் உதயநிதி பேசுகிறார். அவர் பேசியதில் தவறு ஒன்றும் இல்லை.
The post ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்: முத்தரசன் உள்பட 100க்கும் மேற்பட்ட இந்திய கம்யூ.கட்சியினர் கைது appeared first on Dinakaran.