சென்னை மக்களுக்கு குட் நியூஸ்… கோயம்பேடு – ஆவடி மெட்ரோ பணிகளுக்கான ஆய்வறிக்கை தயார்.. விரைவில் சமர்ப்பிப்பு!!

சென்னை : கோயம்பேடு – ஆவடி இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தின் 3வது வழித்தடங்களுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ரூ.69,180 கோடி செலவில் 119 கிமீ நீளத்திற்கு நடைபெறும் இந்த பணிகளை 2028ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை புறநகர் பகுதிகளான சிறுசேரி – கிளாம்பாக்கம், பூந்தமல்லி – பரந்தூர், கோயம்பேடு – ஆவடி ஆகிய பகுதிகளையும் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கோயம்பேடு – ஆவடிக்கு திருமங்கலம், முகப்பேர் வழியாக செல்ல 17 கிமீ, சிறுசேரி – கிளாம்பாக்கம் செல்ல 26 கிமீ, பூந்தமல்லி – பரந்தூர் செல்ல 50 கிமீ என மொத்தம் 93 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றது. இதில் கோயம்பேடு, ஆவடி மற்றும் சிறுசேரி, கிளாம்பாக்கம் ஆகிய வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிப்பு பணிகள் நிறைவுபெற்றுள்ளது. இந்த ஆய்வறிக்கை விரைவில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பூந்தமல்லி – பரந்தூர் வழித்தடத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை மக்களுக்கு குட் நியூஸ்… கோயம்பேடு – ஆவடி மெட்ரோ பணிகளுக்கான ஆய்வறிக்கை தயார்.. விரைவில் சமர்ப்பிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: