ஆலைக்கரும்பு, சோளப்பயிர்கள் சாய்ந்து சேதம்

 

இடைப்பாடி, செப்.11: இடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் பெய்த தொடர் மழையால், ஆலைக்கரும்பு மற்றும் நெற்பயிர் வயலில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இடைப்பாடி சுற்றியுள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், சென்னிமலையனூர், வலையசெட்டியூர், பில்லுக்குறிச்சி, காசிக்காடு, சித்தூர், வெள்ளரிவெள்ளி, பக்கநாடு, ஆடையூர், கொங்கணாபுரம், தங்காயூர், எருமைப்பட்டி, கோணசமுத்திரம், புதுப்பாளையம், வேம்பன்ஏரி, மூலப்பாதை, குள்ளம்பட்டி, கல்வடங்கம், கோனேரிப்பட்டி, செட்டிப்பட்டி, அரசிராமணி, தேவூர் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து தினமும் மதியம், மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று இடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழைக்கு பல்வேறு இடங்களில் சோளம், மரவள்ளி, நெற்பயிர், ஆலை கரும்பு ஆகியவையில் சாய்ந்து சேதமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே சமயம், நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post ஆலைக்கரும்பு, சோளப்பயிர்கள் சாய்ந்து சேதம் appeared first on Dinakaran.

Related Stories: