பாரத் மண்டபத்திற்குள் புகுந்த வெள்ளம்: காங். விமர்சனம்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் ஜி20 மாநாடு நடந்த பாரத் மண்டபத்தில் தண்ணீர் தேங்கியது. மழை வெள்ளத்தில் பலர் நடந்து சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த புகைப்படத்தை இணைத்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத் டிவிட்டரில் பதிவிடுகையில், பாஜ அரசின் வெற்று வளர்ச்சி அம்பலமாகியுள்ளது. ஜி-20 மாநாட்டுக்காக ரூ.2,700 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒரே மழையில் அனைத்தும் போய்விட்டது. நாட்டுக்கு எதிரான சர்வதேச சதியின் ஒரு பகுதியாக இந்த மழை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

The post பாரத் மண்டபத்திற்குள் புகுந்த வெள்ளம்: காங். விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: