பென்னாகரம் அருகே கற்காலத்தை சேர்ந்த கல் ஆயுதம் கண்டெடுப்பு

பாப்பாரப்பட்டி : தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, அளேபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் அஜய். இவனது தாத்தா ராஜூ, கூத்தப்பாடி அம்மாபள்ளம் அருகே உள்ள தங்களது விவசாய நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது கூர்மையான கற்கள் இருப்பதை பார்த்த அஜய், அந்த கற்களை பள்ளிக்கு எடுத்து சென்று, தனது வரலாற்று ஆசிரியரிடம் வழங்கினான்.

இதுகுறித்து வரலாற்று ஆசிரியர்கள் முருகன் மற்றும் கணேசன் ஆகியோர் கூறுகையில், ‘இந்த கற்கள் பழைய கற்காலத்தில் கல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டவை. இதனை கொண்டு உணவுப் பொருட்களை வெட்டுவதற்கும், மரத்தை வெட்டும் கோடாரியாகவும் பயன்படுத்தி இருக்கலாம். இந்த கல் ஆயுதங்கள், பென்னாகரம் அருகே பூதிநத்தம் அகழ்வாய்வில் தோண்டி எடுக்கப்பட்ட கல் ஆயுதத்தை போன்றே உள்ளது. எனவே, இது பழைய கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்திய கல் ஆயுதமாக இருக்கலாம்,’ என்றனர். மாணவன் கண்டெடுத்த பழைய கற்கால கல் ஆயுதத்தை பள்ளியில் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

The post பென்னாகரம் அருகே கற்காலத்தை சேர்ந்த கல் ஆயுதம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: