மக்கள் மனங்களில் இடம்பிடித்த மாரிமுத்து மறைவு கலையுலகிற்கு பேரிழப்பாகும்: அமைச்சர் சக்கரபாணி, நடிகர் பிரசன்னா உள்ளிட்டோர் இரங்கல்!!

சென்னை : நடிகரும் , இயக்குனருமான மாரிமுத்து இன்று காலை 8.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. வாலி, உதயா, பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்தவர் இவர்.மாரிமுத்து மறைவு திரையுலகினர் மட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் சக்கரபாணி இரங்கல் : இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து அவர்களது மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது. மக்கள் மனங்களில் இடம்பிடித்த அவரது மறைவு கலையுலகிற்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்

நடிகர் பிரசன்னா இரங்கல்! : இயக்குநர் மாரிமுத்துவின் மறைவால் அதிர்ச்சி அடைந்தேன்; நாங்கள் சகோதரர்களைப்போல இருந்தோம்; அவரது வாழ்க்கை எளிதானதாக இல்லை; சமீபத்தில் அவர் மிகச்சிறப்பாக நடித்து வந்தார்; அவர் இன்னும் சில காலம் நம்முடன் இருந்திருக்க வேண்டும்”

நடிகர் சரத்குமார் இரங்கல் : “நண்பர் மாரிமுத்து அவர்கள் திடீர் மாரடைப்பால் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. ‘புலிவால்’ திரைப்படத்தில் அவருடன் பணியாற்றிய நாட்களை நினைவு கூர்கிறேன்.வேறு எவராலும் பூர்த்தி செய்ய முடியாத வெற்றிடத்தை உருவாக்கி மறைந்துள்ளார்!”

The post மக்கள் மனங்களில் இடம்பிடித்த மாரிமுத்து மறைவு கலையுலகிற்கு பேரிழப்பாகும்: அமைச்சர் சக்கரபாணி, நடிகர் பிரசன்னா உள்ளிட்டோர் இரங்கல்!! appeared first on Dinakaran.

Related Stories: