கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ப.சுப்பராயன் சிலை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் ப.சுப்பராயன் சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை மாகாண முன்னாள் முதல்வர் டாக்டர் ப.சுப்பராயன். அவரது நினைவை போற்றும் வகையில், 2021-22ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்பு துறையின் மானியக்கோரிக்கையில், தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் உழைத்த சென்னை மகாணத்தின் முன்னாள் முதல்வர் ப.சுப்பராயனுக்கு சென்னையில் முழு உருவச்சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ப.சுப்பராயன் உருவ சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை
செலுத்தினார். தொடர்ந்து, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

The post கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ப.சுப்பராயன் சிலை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: