இந்நிலையில், காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில் இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும் ஆங்காங்கே கால்நடைகள் சாலையிலேயே படுத்து உறங்குவதும், நின்று கொண்டிருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவுகின்றன. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், வாலாஜாபாத் – காஞ்சிபுரம் சாலையில் நாள்தோறும் தொழிற்சாலைகளுக்கு செல்லும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் மட்டுமின்றி இருசக்கர வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் சென்று வருகின்றனர். சாலையிலேயே படுத்து உறங்கும் கால்நடைகளால் பெரும் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
இது மட்டுமின்றி பகல் நேரங்களில் வாகன ஓட்டிகள் மாடுகள் உறங்குவதை கண்டு ஒதுங்கி செல்கின்றனர். இதேபோல், இரவு நேரங்களில் சாலையில் படுத்து உறங்கும் கால்நடைகளால் விபத்துக்குள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை நெடுஞ்சாலை துறையிடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.
The post வாலாஜாபாத் – காஞ்சிபுரம் இடையே சாலையில் திரியும் கால்நடைகள்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.
